IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 35 Of 52
Go to:
ஆயுள் காப்பீட்டில், உபரி என்ற சொல், கடன்பொறுப்புகளின் மதிப்புகளை விட அதிகமாக உள்ள சொத்துக்களின் மதிப்பை குறிக்கிறது.இது எதிர்மறையாக இருந்தால், அது ஒரு பளு எனப்படும்.
நிகர ஒற்றை ப்ரீமியம் என்பது ப்ரீமியம் செலுத்தும் காலம் முழுவதும் செலுத்துகிற வகையில் சமமாக நிலையாக்கப்படுகிறது.
நிலை ப்ரீமியம் என்பது வயதுடன் அதிகரிக்காத மாதிரி நிர்ணயிக்கப்பட்ட ப்ரீமியம் அளவு மற்றும் ஒப்பந்த காலம் முழுவதும் தொடர்ந்து இது நிலையானதாக இருக்கும்.
ஒரு காப்பீட்டு ஒப்பந்தத்தின்கீழ் செலுத்தவேண்டிய அடிப்படை நன்மைகளுடன் கூடுதலாக போனஸ் வழங்கப்படும்.
போனஸின் மிக பொதுவான வடிவம் மாற்றியமைப்பு போனஸ் (Reversionary Bonus) ஆகும்.