IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 12 Of 52
Go to:
காப்பீட்டு முகவர்' என்பவர் காப்பீடு வணிகத்தை கோரி மற்றும் பெறுவதற்காக காப்பீட்டாளர் மூலம் நியமிக்கப்பட்ட தனிநபர்,
கலவைக் காப்பீட்டு முகவர்' என்பவர் இரண்டு அல்லது அதிக காப்பீட்டாளர் மூலம் நியமிக்கப்பட்ட ஒரு காப்பீட்டு முகவர், ஆனால் அவர் ஒரு ஆயுள் காப்பீட்டாளர், ஒரு பொது காப்பீட்டாளர், ஒரு உடல்நலக் காப்பீட்டாளர் மற்றும் ஒவ்வொரு மோனோ-லைன் காப்பீட்டாளர்களிலும் ஒன்றிற்காக மட்டுமே வேலை செய்ய முடியும்.
இந்திய ஒப்பந்த சட்டம், 1872-இன் (Indian Contract Act, 1872) விதிமுறைகள் காப்பீட்டு ஒப்பந்தங்கள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் நிர்வகிக்கிறது.
ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தங்கள் பொதுவாக நீண்ட கால காப்பீட்டு ஒப்பந்தங்களாக இருக்கும் மற்றும் 10, 20 அல்லது பல ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
ஒப்பந்தகாலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட ப்ரீமியங்களை அவர்களது பாலிசிதாரர்கள் நலனுக்காக காப்பீட்டு நிறுவனம் ஒரு நிதியில் வைத்திருக்கிறது.