IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 16 Of 52
Go to:
தகவல் ஏடு: ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் பயன்படுத்தும் தகவல் ஏடு என்பது, அதன் ஒவ்வொரு காப்பீடு திட்டங்களைப் பற்றியும், பின்வரும் தகவலை தர வேண்டும்.
அடிப்படைத் தகவல் என்பது காப்பீடு நிறுவனங்கள் முடிவெடுப்பதற்கு துணைசெய்யும் தகவல்களாகும் - (1) அவர்கள் அந்த அபாயத்தினை ஏற்பார்களா?, (2) அப்படியானால், எந்த ப்ரீமிய விகிதத்தில் மற்றும் எந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் ?
அடிப்படை உண்மை என்பது ஒரு காப்பீட்டு ஏற்பாளர் அந்த அபாயத்தை ஏற்பதா எனத் தீர்மானிக்கவும், ஏற்பதானால் அதன் ப்ரீமிய விகிதம் மற்றும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன எனத் தீர்மானிப்பதைப் பாதிக்கக்கூடிய உண்மை என வரையறுக்கப்பட்டுள்ளது.
காப்பீடுப் பற்று (Insurable interest) - காப்பீடு ஒப்பந்தத்தின் விஷயம் பாலிசிதாரருக்கு அந்த சொத்தில் உள்ள நிதி சார்ந்த பற்றை குறிக்கிறது.
பாலிசிதாரருக்கு சொத்தில் உரிமை இருந்தால் மட்டுமே அதை காப்பீடு செய்துக்கொள்ளும் சட்டப்பூர்வமான உரிமை அவருக்கு இருக்கிறது.