IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 19 Of 52
Go to:
தனிநபரின் வாழ்க்கை சுழற்சியில் ஏழு கட்டங்கள் உள்ளன - அதாவது கற்பவர், சம்பாதிப்பவர், துணைவர், பெற்றோர், வழங்குநர், காலிகூடு (Empty Nestor), மற்றும் அந்தி நாட்களான ஓய்வு நாட்கள்.
பொருளாதார வாழ்க்கை சுழற்சியில் மூன்று கட்டங்கள் உள்ளன. மாணவர் கட்டம், வேலை செய்யும் கட்டம், ஓய்வு பெறும் கட்டம்
நிதி சந்தையில் மூன்று வகையான தயாரிப்புகள் உள்ளன. பரிவர்த்தனை தயாரிப்புகள், காப்பீடு போன்ற தற்செயல் நிகழ்வுகளுக்கான தயாரிப்புகள், செல்வக்குவிப்பிற்கான தயாரிப்புகள்
பரிவர்த்தனை தயாரிப்புகள் – வங்கி சேமிப்புகள் மற்றும் பிற சேமிப்பு வகைகள் ஒருவருக்கு சரியான நேரம் மற்றும் அளவில் போதிய வாங்கும் சக்தியை (பணப்புழக்கம்) வழங்குகிறது.
காப்பீடு போன்ற தற்செயல் நிகழ்வுகளுக்கான தயாரிப்புகள் – திடீர் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் நேரக்கூடிய பெரிய இழப்புகளுக்கு எதிரான பாதுகாப்பை இவை வழங்குகின்றன.