IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 23 Of 52
Go to:
ஒரு என்டோமென்ட் அல்லது அறநிதிக் காப்பீட்டு ஒப்பந்தம் என்பது உண்மையில் இரு திட்டங்களின் ஒருங்கிணைவாகும்.
பாலிசி காலத்தில் காப்பீடு பெற்றவர் இறந்தால் முழு காப்பீடுத் தொகையையும் வழங்கும் ஒரு காலக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் காப்பீட்டுக் காலம் நிறைவடைந்த பின்னரும் காப்பீடு பெற்றவர் உயிர் வாழ்ந்தால் இந்தத் தொகையை வழங்கும் ஒரு உண்மையான என்டோமென்ட் திட்டம்.
இவ்வாறு, இத்திட்டத்தில் (என்டோமென்ட்) ஒரு மரண மற்றும் வாழ்நாள் பலனுக்கான கூறுகள் இரண்டுமே உள்ளன.
பண-மீட்சி திட்டம் என்பது காப்பீடுத் தொகையில் ஒரு பகுதியை குறிப்பிட்ட தவணைகளில் பாலிசிக் காலத்தில் திரும்பப் பெறும் வழிவகையினைக் கொண்டிருக்கும் ஒரு என்டோமென்ட் திட்டமாக உள்ளது. மீதமுள்ள காப்பீடுத் தொகை பாலிசிக் காலத்தின் இறுதியில் பெறப்படுகிறது.
சமநிலை' என்ற சொல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் லாபங்களில் பங்கேற்கும் பாலிசிகளை குறிக்கின்றன.