IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 25 Of 52
Go to:
பாலிசி நீதிமன்ற இணைப்புகள், கடனாளர்கள் மற்றும் ஆயுள் காப்பீடு செய்தவரின் கட்டுப்பாட்டை மீறியிருக்கும்.
ஈடுகோரல் பணம் அறங்காவலர்களுக்கு வழங்கப்படும்.
பாலிசியை ஒப்படைக்க முடியாது மற்றும் எந்த நியமனமும் அல்லது உரிமை மாற்றமும் அனுமதிக்கப்படாது.
பாலிசிதாரர் பாலிசியின் கீழுள்ள நன்மைகளை நிர்வகிப்பதற்கு ஒரு சிறப்பு அறங்காவலரை நியமிக்கவில்லை என்றால், பாலிசியின் கீழ் பாதுகாக்கப்பட்ட தொகை, காப்பீடு அமலாக்கப்பட்ட அலுவலகம் உள்ள இடத்தின் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அறங்காவலருக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்தியச் சூழலில் Married Women's Property Act-MWPA-யின் கீழ் (திருமணமான பெண்களின் சொத்துச் சட்டம்) ஒரு அறக்கட்டளையில் பாலிசியை வைக்கும் வசதி மற்றொரு முன்மொழிவாகும் – அந்தப் பணம் பாலிசியின் பயனாளிக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். இவ்வாறு காப்பீடு பெற்றவரின் சொத்தின்மீது கடனளித்தவர்களின் கேட்புகளுக்கு எதிராக பாதுகாப்புப் பெறுகிறது.