IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 28 Of 52
Go to:
பங்கேற்கும் பாலிசிகளுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுவிட்டால் அது ஒரு உத்தரவாதமாகிறது.
ஒரே ப்ரீமிய பாலிசிகளில் 45 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இத்தொகை ஒரு ப்ரீமியத்தின் 125% எனவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு ப்ரீமியத்தின் 110% எனவும் இருக்கும்.
வழக்கமான ப்ரீமிய பாலிசிகளில், 45 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இந்தத் தொகை வருடாந்திரம் செலுத்திய மொத்த ப்ரீமியத்தைப் போன்று 10 மடங்காகவும் மற்றவர்களுக்கு 7 மடங்காகவும் இருக்கும்.
உலகளாவிய ஆயுள் காப்பீடு: இது ஒரு நிரந்தர ஆயுள் காப்பீட்டு வடிவமாகும். இதற்கு நெகிழ்வுத்தன்மை கொண்ட ப்ரீமியங்கள், நெகிழ்வுத்தன்மையுள்ள முதன்மைத் தொகை மற்றும் இறப்புக் கால பலன் தொகைகள், மற்றும் பிரிக்கப்பட்ட அதன் விலைக் காரணிகள் ஆகியவை உண்டு
மாறக்கூடிய ஆயுள் காப்பீடு: இது ஒரு ‘முழு ஆயுள் காப்பீட்டு' வகையாகும். ப்ரீமியங்கள் செலுத்தப்பட்ட ஒரு சிறப்பு முதலீட்டு கணக்கில் உள்ள முதலீட்டு செயல்திறனுக்கு ஏற்ப இந்த பாலிசியின் இறப்புக் கால பலன்களும் பண மதிப்பும் இருக்கும்.