IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 29 Of 52
Go to:
யூனிட் லிங்க்டு அதாவது யூனிட் இணைக்கப்பட்ட காப்பீடு - இந்த ஒப்பந்தங்களின் கீழ் கிடைக்கும் பலன்கள் பாலிசிதாரரின் கணக்கில் பணம் செலுத்த வேண்டிய உரிய நாளில் வரவு வைக்கப்படும் யூனிட்டுகளின் மதிப்பினால் முழுமையாகவோ பகுதி அளவிலோ தீர்மானிக்கப்படுகிறது.
ப்ரீமியம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. யூலிப் ப்ரீமியங்களின் கூறுகளாக இருப்பவை பாலிசி ஒதுக்கீடு கட்டணம், முதலீட்டு அபாய ப்ரீமியம் மற்றும் இறப்பு கட்டணம்
முதலாவதாக முகவர் கமிஷன், பாலிசி அமைப்பு செலவுகள், நிர்வாக செலவுகள் மற்றும் சட்ட வரிகளை கொண்டுள்ள பாலிசி ஒதுக்கீடு கட்டணம் (PAC – Policy Allocation Charges) உள்ளது.
இரண்டாவது கூறு அபாய காப்பை வழங்கும் செலவான இறப்பு கட்டணமாக உள்ளது.
மேலுள்ள இரண்டு செலவுகளுக்குப் பிறகு மீதியுள்ள ப்ரீமிய தொகை, யூனிட்களை வாங்குவதற்கு ஒதுக்கப்படுகிறது.