IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 3 Of 52
Go to:
சட்டரீதியான ஒழுங்குமுறை அமைப்பாக பணிபுரிய ஏப்ரல் 2000-இல் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மன்ட் அதாரிட்டி (ஐஆர்டிஏ) அமைய வழிவகுத்தது.
அபாய மேலாண்மை அணுகுமுறைகள் - 1. அபாய தவிர்ப்பு (Risk avoidance), 2. அபாயத்தை தன்னிடமே வைத்திருத்தல் (Risk retention), 3. அபாய குறைப்பு மற்றும் கட்டுப்பாடு (Risk reduction and control)
அபாய தவிர்ப்பு (Risk Avoidance) அபாயத்தை கையாள ஒரு எதிர்மறையான வழி. தனிப்பட்ட மற்றும் சமூக முன்னேற்றங்களை கொண்டுவர சில அபாயங்களை எதிர்கொள்வது தேவைப்படுகிறது.
அபாய குறைப்பு மற்றும் கட்டுப்பாடு - இழப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்க மற்றும்/அல்லது இழப்பு ஏற்பட்டாலும் அதன் தீவிரத்தை குறைக்க நடவடிக்கைகளை எடுப்பது தான்.
இழப்பு ஏற்படும் வாய்ப்புகளை தடுக்க எடுக்கப்படும் வழிமுறைகள் ‘இழப்பு குறைப்பு' (Loss Reduction) என்றும் இழப்பின் தீவிரத்தை குறைக்க எடுக்கப்படும் வழிமுறைகள் ‘இழப்பை தடுத்தல்' (Loss Prevention) எனப்படுகின்றன.