IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 43 Of 52
Go to:
காப்பீடு சட்டம் 1938-இன் பிரிவு 39-இன் கீழ், தன் சொந்த வாழ்க்கையின் மீது பாலிசியை வைத்திருப்பவர், அவரது மரணம் ஏற்பட்டால் பாலிசியின் கீழுள்ள காப்பீடுத் தொகை செலுத்தப்பட வேண்டிய நபர் அல்லது நபர்களின் பெயரை நியமிக்க முடியும்.
பெயர் நியமனத்தை பாலிசியில் மற்றொரு மேற்குறிப்பு மூலம் மாற்ற முடியும்.
பெயர் நியமனம் நியமிக்கப்பட்டவருக்கு காப்பளிக்கப்பட்டவருக்கு மரணம் ஏற்படும் நிகழ்வில் பாலிசி பணத்தை பெறும் உரிமையை கொடுக்கிறது.
ஒரு நியமிக்கப்பட்டவருக்கு மொத்த (அல்லது பகுதி) ஈடுகோரலில் எந்த உரிமையும் கிடையாது.
பெயர் நியமிக்கப்பட்டவர் ஒரு சிறாராக இருக்கும்போது, பாலிசிதாரர் இன்னொரு வரை நியமிக்க வேண்டும்.