IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes

Page 6 Of 52

Go to:

  • ஒருங்கிணைந்த குறைதீர் மேலாண்மை அமைப்பு (IGMS) ஐஆர்டிஏ-வால் தொடங்கப்பட்டுள்ளது, அது காப்பீட்டுக் குறைதீர் தகவலின் மையக் களஞ்சியமாகவும், துறையிலுள்ள குறைதீர்ப்பு முறைகளை கண்காணிப்பதற்கான ஒரு கருவியாகவும் செயல்படுகின்றது.
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986: 'நுகர்வோர் வழக்கு குறைதீர்த்தல் முகமைகள்' ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், மற்றும் தேசிய அளவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • நுகர்வோர்' என்பவர்: சலுகை நிமித்தமாக பொருளை வாங்கக்கூடிய அல்லது அத்தகைய பொருட்களை பயன்படுத்தக்கூடிய ஒருவர் ஆவார். ஆனால் மறுவிற்பனைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் வணிக நோக்கத்துக்காகவோ அத்தகைய பொருட்களைப் பெறக்கூடிய ஒரு நபர் இதில் சேர்க்கப்படவில்லை, அல்லது
  • நுகர்வோர்' என்பவர்: ஏதேனும் ஒரு காரணத்துக்காக அத்தகைய சேவைகளை வாடகைக்கு அமர்த்துபவர் அல்லது பெறக்கூடியவர், மேலும் இது அத்தகைய சேவைகளினால் பலன் பெறுபவர்களையும் உள்ளடக்கியுள்ளது.
  • மாவட்ட மன்றம் - இந்த மன்றம் 20 இலட்சம் ரூபாய் வரையிலான பொருட்கள் அல்லது சேவைகள் மற்றும் கோரப்படும் இழப்பீடு ஆகியவை தொடர்பான வழக்குகளை மட்டுமே நடத்துகின்றது.

IC38 காப்பீட்டு முகவர்கள்

Copyright 2015 - MODELEXAM MODELEXAM®