IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 7 Of 52
Go to:
மாநில ஆணையம்: இது மாவட்ட மன்றங்களிலிருந்து வரும் மேல் முறையீடுகளை விசாரிக்கின்றது. மேலும், இது 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான, ஆனால் 100 இலட்சம் ரூபாய்க்கும் மிகாத மதிப்புடைய பொருட்கள் அல்லது சேவைகள் மற்றும் இழப்பீடு குறித்த வழக்குகளையும் நேரடியாக ஏற்றுக்கொள்கிறது.
தேசிய ஆணையம் : இந்தச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ள இறுதி ஆணையம் தேசிய ஆணையம் ஆகும். இது அசல், மேல்முறையீட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
தேசிய ஆணையம் - மாநில ஆணையம் வழங்கிய ஆணைகள் குறித்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கின்றது, மேலும் 100 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புடைய பொருட்கள் / சேவைகள் மற்றும் இழப்பீடு குறித்த வழக்குகளை நேரடியாக ஏற்றுக்கொள்கிறது.
தேசிய ஆணையம் - மாநில ஆணையத்தைக் கண்காணிக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது.
காப்பீட்டு வணிகத்தைப் பொறுத்தவரை, மூன்று குறைதீர் மன்றங்களிலும் பதிவு செய்யப்படும் பெரும்பாலான நுகர்வோர் புகார்கள் பின்வரும் முக்கிய வகைகளின் கீழ் வருகின்றன: ஈடுகோரல் தீர்வுகளில் ஏற்படும் தாமதம், ஈடுகோரல்கள் தீர்க்கப்படாமை, ஈடுகோரல்கள் தள்ளுபடி செய்யப்படுதல், இழப்பு அளவு, பாலிசி விதிமுறைகள், நிபந்தனைகள் போன்றவை