IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 45 Of 52
Go to:
இந்தியாவில் உரிமை மாற்றம் காப்புறுதி சட்டத்தின் பிரிவு 38 மூலம் கட்டுபடுத்தப்படுகிறது.
நிபந்தனையுள்ள உரிமை மாற்றத்தில் ஆயுள் காப்பளிக்கப்பட்டவர் முதிர்வு தேதி வரை உயிருடன் இருந்தால் அல்லது உரிமை பெறுபவர் இறந்துவிட்டால் பாலிசி மீண்டும் ஆயுள் காப்பிடை பெற்றவருக்கு திரும்பி வந்து விடும்
முழுமையான உரிமை மாற்றம், பாலிசி குறித்து உரிமை மாற்றுபவருக்குள்ள அனைத்து உரிமைகள், சாசனம் மற்றும் நலன்களை எந்த நிகழ்விலும் முன்னுள்ள நிலைக்கு அல்லது அவரது எஸ்டேட் நிலைக்கு திருப்பி வராதபடி உரிமை பெறுபவருக்கு மாற்றப்படுவதை வழங்குகிறது.
உரிமை மாற்றம் எழுத்து மூலமாக இருக்க வேண்டும் மற்றும் ஒப்பந்தத்தில் குறைந்தது ஒரு சாட்சி சான்றளித்திருக்க வேண்டும்.
பாலிசிதாரர் காப்பீட்டு நிறுவனத்திற்கு உரிமை மாற்றத்தை பற்றி ஒரு முன்னறிவித்தலை தருவதும் அவசியம்.