IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 48 Of 52
Go to:
மதிப்பீடு காரணிகள் காப்பீடை பெறும் வாய்ப்புள்ளவர்களின் வாழ்வில் இன்னலை விளைவித்து அபாயத்தை அதிகரிக்கக்கூடிய பொருளாதார நிலைமை, வாழ்க்கை பாணி, பழக்கங்கள், குடும்ப வரலாறு, தனிப்பட்ட உடல்நலம் மற்றும் மற்ற சூழ்நிலைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களை குறிக்கின்றன.
இந்த இன்னல்கள் மற்றும் அதன் சாத்தியமான தாக்கல்களை அடையாளம் கண்டு அதன்படி அபாயத்தை வகைப்படுத்துவது ஏற்பளிப்பில் செய்யப்படுகிறது.
ஒரு உடல்நலக் காப்பீடு பாலிசி பொதுவாக நிரந்தர விலக்குகளுள் இல்லாத விபத்துகள் / நோய்கள் / உடல்நலக் குறைவு ஏதாவது ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ஏற்படும் அடிப்படைச் செலவுகளுக்கு காப்பளிக்கிறது.
உடல்நலக் காப்பீடில் பொதுவாக உள்ளிடப்படும் செலவுகளாவன : அறை / படுக்கைக் கட்டணம், உணவுச் செலவுகள், செவிலியர் செலவுகள், மருத்துவருக்கான கட்டணங்கள், நோயறிவதற்கான சோதனைகள், அறுவை சிகிக்சை அறைக் கட்டணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான இயந்திரங்கள் போன்றவை சார்ந்த செலவுகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவமனைச் செலவுகளும் குறிப்பிடப்பட்ட பகல்-பராமரிப்பு நடவடிக்கைகளும் குறிப்பிட்ட பாலிசிகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.