IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 49 Of 52
Go to:
குடும்ப பெயர்ச்சி பாலிசிகள் (Family Floater Policies) - இங்கு, காப்பீடுத் தொகை குடும்ப உறுப்பினர்களுக்குள் பெயர்ச்சியடைகிறது.
குடும்ப பெயர்ச்சி திட்டங்கள் பொதுவாக கணவர், மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு காப்பளிக்கிறது.
ஒரு கடுமையான நோய் ரைடரில், அந்த கடுமையான நோயை கண்டறியும் நிகழ்வில், விதிகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு வழங்கப்படும். அந்த நோய் காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்ட கடுமையான நோய்களின் பட்டியலில் இருக்கவேண்டும்.
மருத்துவமனை பாதுகாப்பு (Hospital Care) ரைடரின்கீழ், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனையில் ஏற்படும் சிகிச்சை செலவுகளுக்கு பணத்தை செலுத்துகிறது.
வீட்டிலேயே சிகிச்சையெடுத்தல் (Domiciliary treatment) - சில காப்பீட்டு பாலிசிகள் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைப் பலன்களை வழங்குகின்றன.