IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 50 Of 52
Go to:
இது பொதுவாக சாதாரணச் சூழலில் மருத்துவமனையில் / சிகிச்சை மையத்தில் உடல்நலக் குறைவு / காயத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் எடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை கீழ்க்காணும் ஏதாவதொரு சூழலில் இந்தியாவில் வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுப்பதைக் குறிக்கிறது.
ii. நோயாளி இருக்கும் நிலையில் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாது அல்லது
iii. மருத்துவமனையில் போதுமான தங்கும் வசதியின்மை காரணமாக நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லமுடியாது.
முதிர்வு நன்மை (or) முதிர்வு ஈடுகோரல்- இத்தகைய ஈடுகோரல்களில், காப்பீடு முழு பாலிசி காலம் முடிந்த பின்னரும், பெறுபவர் பிழைத்திருந்தால், கால இறுதியில் காப்பீட்டு நிறுவனம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக வாக்களிக்கிறது.
இறப்பு நன்மை - காப்பீடு பெற்றவர் தற்செயலாக அல்லது வேறுவிதமாக அவருடைய/அவளுடைய பாலிசி காலத்தில் இறந்துவிட்டால், காப்பீட்டு நிறுவனம் மீதமுள்ள பாலிசி கடன் மற்றும் ப்ரீமியங்கள் மற்றும் அதற்குரிய வட்டி போன்ற நிலுவையில் உள்ள தொகைகளை கழித்து, திரட்டப்பட்ட போனசுடன் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.