IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 4 Of 52
Go to:
சுய நிதி மூலம் அபாயத்தை தன்னிடமே வைத்திருத்தல் வழிமுறையில் (Risk retention through self financing) இழப்புகள் ஏற்படும் போது இழப்பீடு வழங்கப்படுகிறது.
அபாயத்தை கைமாற்றுதல் (Risk transfer) என்பது அபாயத்தை வைத்திருத்தலுக்கு ஒரு மாற்றாக உள்ளது. அபாய கைமாற்றதலில் இழப்புகளின் பொறுப்பு மற்றொரு நிறுவனத்திற்கு கைமாற்றப்படுகிறது.
அபாயத்தை கைமாற்றுவதற்கு உள்ள முக்கிய வடிவங்களில் காப்பீடு ஒன்றாகும், மற்றும் அது காப்பீட்டு நஷ்டஈடு மூலம் நிச்சயமற்ற நிலையை நம்பகமான நிலையாக மாற்ற அனுமதிக்கிறது.
காப்பீடை தேர்வு செய்யும்போது கருதவேண்டியவை - 1) சிறியதிற்கு அதிக அபாயத்தை எதிர்கொள்ளவேண்டாம். 2) உங்களால் இழக்கமுடிவதை விட அதிகமானவற்றை அபாயத்திற்கு உட்படுத்த வேண்டாம். 3) சாத்தியமான அபாய விளைவுகளை கவனமாக கருத்தில் கொள்க.
ஒரு சொத்து என்பது மதிப்பு அல்லது வருவாய் விளைவிக்கும் ஒன்று.