IC38 காப்பீட்டு முகவர்கள் - ஆயுள் காப்பீடு - Study Notes
Page 2 Of 52
Go to:
தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் – இது இந்தியாவின் மிக பழமையான காப்பீட்டு நிறுவனம். இன்றும் உள்ளது மற்றும் தொடர்ந்து வணிகத்திலும் உள்ளது.
1912-ஆம் ஆண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் சட்டம் (Life Insurance Companies Act) மற்றும் வருங்கால வைப்பு நிதி சட்டம் (Provident Fund Act) காப்பீட்டு வணிகத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டன.
ஆயுள் காப்பீட்டை நாட்டுடமையாக்கல்: ஆயுள் காப்பீட்டு வணிகம் செப்டம்பர் 1, 1956 அன்று நாட்டுடைமயாக்கப்பட்டது மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC of India) உருவாக்கப்பட்டது.
பொது காப்பீட்டை நாட்டுடமையாக்கல் : 1972-இல் காப்பீட்டு வணிக நாட்டுடமையாக்கல் சட்டம் (General Insurance Business Nationalisation Act- GIBNA) இயற்றப்பட்டதும் பொது காப்பீட்டு வணிகம் நாட்டுடமையாக்கப்பட்டது மற்றும் பொது காப்பீட்டு இந்திய கழகம் (General Insurance Corporation of India –GIC) மற்றும் அதன் நான்கு துணை நிறுவனங்களும் அமைக்கப்பட்டன.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 1999 (Insurance Regulatory & Development Act 1999-IRDA) இயற்றப்பட்டது.